செஞ்சியில் 5 பேருக்கு நடமாடும் காய்கறி வண்டி வழங்கல்
செஞ்சியில் 5 பேருக்கு நடமாடும் காய்கறி வண்டியை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-02 13:59 GMT
நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துறை தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் செஞ்சி வட்டாரத்தில் நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுகந்தி தலைமை தாங்கினார். அலுவலர் பிரகாஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மானியத் துடன் கூடிய நடமாடும் காய்கறி வண்டிகளை 5 பேருக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் தீபிகா, தோட்டக்கலை துறை உதவி அலுவலர்கள் ராஜஷ், பிரியங்கா மற்றும் தோட்டக்கலை, வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.