காஞ்சியிலிருந்து அயோத்திக்கு புனிதநீர் கலசம் அனுப்பி வைப்பு

காஞ்சியிலிருந்து அயோத்திக்கு புனிதநீர் கலசம் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2023-12-24 12:53 GMT

அயோத்திக்கு செல்லும் புனித நீர்

"காஞ்சிபுரம் மாவட்டம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 சிவன் கோவில்கள், 15 திவ்யதேசங்கள், சர்வ தீர்த்தம், சிவகங்கை, அனந்தசரஸ், பிரம்ம தீர்த்தம், திருமுக்கூடல் பாலாறு உள்ளிட்ட புனித தீர்த்தங்களில், இரு நாட்களாக புனிதநீர் சேகரிக்கப்பட்டு, ஒன்றிணைக்கப்பட்டது. நேற்று மாலை, காஞ்சிபுரம் சங்கரமடத்திலிருந்து வேத பாராயணம், ஸ்ரீராம பஜனை முழங்க, தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக ஏகாம்பரதநாதர் கோவிலுக்கு சென்றது.

அங்கு கலசங்களுக்கு காமாட்சியம்மன் கோவில் ஸ்தானீகர் சுரேஷ் சாஸ்திரிகள், குமரகோட்டம் கோவில் ஸ்தானீகர் காமேஸ்வர குருக்கள், ஏகாம்பரதநாதர் கோவில் ஸ்தானீகர் பாலசுப்ரமண்ய குருக்கள், இராவாதீஸ்வர் கோவில் ஸ்தானீகர் ஸ்ரீசெல்லப்பா குருக்கள் இணைந்து சிறப்பு பூஜை செய்தனர்.

தீர்த்த கலசங்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செயலரும், சமுதாய நல்லிணக்க பொறுப்பாளருமான ஸ்ரீதேவ்ஜி ராவத், ஆர்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பாளர் பிரகாஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை தலைவர் நடராஜன்,

ஹிந்து முன்னணி மாநில செயலர் ஸ்ரீபரமேஸ்வரன் உள்ளிட்டோர், புனித கலசத்தை அயோத்திக்கு அனுப்பினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர காஞ்சி நகர பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்."

Tags:    

Similar News