சென்னைக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.;
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொண்ட மூன்று கனரக வாகனங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வியுரேகா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் , நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி.சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் மஹிம் அபு பக்கர், வர்த்தகர் சங்க தலைவர் திரு.மதியழகன் ,
சென்ட்ரல் லயன்ஸ் கிளப் பொருளாளர் மஹாவீர் ஜெயின் , சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா , தன்னார்வல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்..