கொல்லிமலையில் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை..!

கொல்லிமலையில் வெளிமாநிலத்திலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 102 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-21 08:05 GMT
கொல்லிமலையில் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்., தெம்பளம் பஸ் ஸ்டேண்டு அருகே கொல்லிமலை வளப்பூர் நாடு பஞ்., பெரிய கோவிலுார் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த பொலிரோ காரில் பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன்பேரில், டி.எஸ்.பி., தனராசு மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் வாழவந்தி நாடு எஸ்.ஐ., தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படி நின்றிருந்த பொலிரோ காரில் சோதனை நடத்தினர். அப்போது, அதில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்து, அதிகாரிகள் அவற்றை  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொலிரோ காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், தப்பி ஓடிய காரின் உரிமையாளர், டிரைவர் கொல்லிமலை பெரிய கோவிலுார் பகுதியை சேர்ந்த கார்த்திக், செல்வராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  
Tags:    

Similar News