ஜெ.இ.இ. தேர்வில் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவன் சாதனை

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவன் பிரசன்னா ஜெஇஇ தேர்வில் 99.80 சதவீத மதிபெண்களை பெற்று சாதனை புரிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-02-23 02:00 GMT

ஜெ.இ.இ. தேர்வில் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவன் சாதனை

ஜெ.இ.இ. முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வு எழுதிய 73 மாணவர்களில் 34 மாணவர்கள் 90 சதவீத மதிபெண்கள் பெற்று சாதனை பெற்றுள்ளனர். மேலும் 12-ம் வகுப்பு மாணவன் பிரசன்னா 99.80 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அந்த மாணவனை சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், பள்ளியின் முதல்வர் மனோகரன், பிரசன்னாவின் தாய் கிருஷ்ணப்ரியா ஆகியோர் முன்னிலையில் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் ஜெ.இ.இ. முதல் கட்ட தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நேரத்திலேயே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துடன் நீட் தேர்விற்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் ெதரிவித்தனர்.

Tags:    

Similar News