பனங்குடியில் தொடர் விபத்து: கிராம மக்கள் சாலைமறியல்

நாகை மாவட்டம் பனங்குடியில் தொடர் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈ.

Update: 2024-06-21 14:54 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் 

நாகை மாவட்டம் பனங்குடியில் தொடர் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகூர் -நன்னிலம் சாலையில் பனங்குடி -வாஞ்சூர் இடையே உள்ள சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.கடந்த மாதம் பனங்குடி மெயின் சாலையில் சன்னமங்கலம் பகுதியில் சேர்ந்த காத்தவராயன் என்பவர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுகன்யா என்ற பெண் ஒருவர் சாலை கடக்க முயற்சித்த போது விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தொடர்ந்து வேகத்தடை அமைக்க கோரி நெடுஞ்சாலைத் துறையினைடம் கோரிக்கை விடுத்தும் வேகத்தடை அமைக்காமல் அலட்சியபடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினம் தாசில்தார் ராஜா,நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 நாட்களில் வேகத்தடை அமைத்து தரப்படும் என உறுதியளித்தை அடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் - நன்னிலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News