கல்லணையில் தொடர் வாகன திருட்டு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கல்லணையில் நடைபெற்று வரும் வாகனத்திருட்டை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

Update: 2024-05-01 04:20 GMT

பைல் படம் 

கல்லணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் கும்பலால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சை மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், திருச்சி, தஞ்சை மாவட்டத்தின் எல்லையாகவும் கல்லணை விளங்கி வருகிறது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கல்லணைக்கு வந்து செல்கின்றனர். அவர்களது வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு கல்லணையை சுற்றி பார்ப்பதோடு கல்லணையில் ஆறுகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பது, மீன்பிடித்து விளையாடுவது உள்ளிட்ட பொழுது போக்கில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் திரும்ப வந்து பார்க்கும்போது தங்களது வாகனங்கள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.  இதுதொடர்பாக கல்லணையில்  உள்ள தோகூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசாரும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்புகளை ஆய்வு செய்கின்றனர். இப்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் அதிகமான பைக்குகள் கல்லணையில் திருட் டுப் போய் உள்ளதாகவும் கூறப் படுகிறது. ஆனால் பைக் கிடைத்த பாடு தான் இல்லை. இதனால் வாகனத்தை பறிகொடுத்த அப்பாவி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மது போதைக்கு அடிமையானவர்கள் பணத்திற்காக இது போன்ற திருட்டுகளில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அவர்கள் மக்கள் கூடும் இடங்கள், கல்லணை போன்ற சுற்றுலா தளங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனத்தை திருடி சென்று விடுகின்றனர். கல்லணையில் விடுமுறை நாட்களில் அதிகப்படியாக சுற்றுலா பயணிகள் வருவதால் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்க வேண்டும். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக அமைக்கப் பட வேண்டும். அனைத்து நுழைவு பகுதியிலும் செக் போஸ்ட்டுகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Tags:    

Similar News