கனமழையால் பாதிப்பு ஏற்படாமலிருக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு ஏற்படாமலிருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

Update: 2023-12-18 11:29 GMT

தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு ஏற்படாமலிருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 மதுரை ஒத்தக்கடை பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர் முகாமை தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனு பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "மக்களின் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலில் கோவையில் தொடங்கி வைத்தார். தற்போது அந்த திட்டம் மதுரையின் 10 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் காவல்துறை, வீட்டுவசதி வாரியம், மின்சார துறை, வருவாய் துறை, வேலைவாய்ப்பு துறை உள்ளிட்ட 13 துறைகளில் மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டு அதற்கு உடனடி தீர்வு காணப்பட இருக்கிறது. படிப்படியாக இந்த திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கான தீர்வு அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அந்தந்த பகுதியில் உள்ள திமுக அமைச்சர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலூர் பிரதான கால்வாயில் நீர் திறந்து விடுவது தொடர்பாக அரசியல் செய்யப்பட்டு வருகிறது, விவசாயிகளுக்கு தேவையான நீர் தேவையான போகு கண்டிப்பாக திறந்து விடப்படும். மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக பல்வேறு திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார், இவை அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது" என கூறினார்.

Tags:    

Similar News