நகை திருடிய வேலைக்கார பெண் கைது
Update: 2024-01-09 07:06 GMT
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலா, மருத்துவர். இவரது வீட்டில் 7 பவுன் தங்க நகை திருடு போனது. இது தொடர்பாக திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மேற்கு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு மருத்துவர் கமலா வீட்டில் பணியாளராக வேலை பார்த்த அனிதா என்பவரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட 7 பவுன் தங்க நகையை மீட்டு விசாரிக்கின்றனர்.