நில அபகரிப்பு பிரிவில் வழக்குகளுக்கு தீர்வு

செங்கல்பட்டில் நடந்த நில அபகரிப்பு சிறப்பு பிரிவு குறை தீர்க்கும் கூட்டத்தில் 6 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2024-02-13 03:11 GMT
பைல் படம் 

செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், நிலம் மற்றும் அது தொடர்பான வழக்குகளை விசாரிக்க, நில அபகரிப்பு பிரிவு செயல்படுகிறது. இங்கு வழங்கப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, வருவாய், காவல், பதிவு, நில அளவை ஆகிய துறைகள் சார்ந்த அலுவலர்கள் கொண்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அரசு உத்தரவிட்டது. அதன் தலைவராக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் - நிலம், உறுப்பினர் செயலராக போலீஸ் டி. எஸ். பி. , மற்றும் உறுப்பினர்களாக உதவி பதிவுத்துறை தலைவர், தனி வட்டாட்சியர், நில அளவை ஆய்வாளர், இன்ஸ்பெக்டர் ஆகியோரை நியமித்து, கலெக்டர் உத்தரவிட்டார்

. தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டரின் நேர்முக உதவியாளரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான லலிதா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், நிலம் அபகரிப்பு தொடர்பாக ஏழு மனுக்கள் வரப்பெற்றன. விசாரணைக்கு பின், ஆறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஒரு மனுவுக்கு, மனுதாரர் வரவில்லை. இந்த கூட்டம், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும். இந்த முகாமில், நில அபகரிப்பு தொடர்பான மனுக்கள் அளித்து தீர்வு காணலாம்.

Tags:    

Similar News