பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது
இரணியல் அருகே பணம் வைத்து சூதாடிய ஏழு பேர் கைது.;
Update: 2024-03-13 18:03 GMT
கைது
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் சிறப்பு இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்ததது. உடனே அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அங்கிருந்த ரூபாய் 500, சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். அஜன், செல்வன், அரிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து இரணியல் போலீஸ நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் வடக்குப் பெருங்குடியில் பணம் வைத்து சூதாடிய திரவியம், ராமதாஸ், குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 490, சீட்டு கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.