தூத்துக்குடியில் கழிவுநீா்க் கால்வாய் பணி தொடக்கம்

தூத்துக்குடியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை  அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். 

Update: 2024-02-03 03:17 GMT

தூத்துக்குடியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை  அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பொன்சுப்பையா நகா் பகுதியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில்  கழிவுநீா்க் கால்வாய் அமைப்படவுள்ளது. இப்பணியை, சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் நேற்று தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், மாநகராட்சிப் பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் பிரின்ஸ் ராஜேந்திரன், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மாமன்ற உறுப்பினா் ஜெயசீலி, பகுதிச் செயலா் ஜெயக்குமாா், வட்டச் செயலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News