சேலம் பெண்கள் சிறைக்கு தையல் எந்திரங்கள்

ஜே.எம்.எச்.ஏ. தொண்டு நிறுவனம் மூலம் 2 தையல் எந்திரங்கள் வழங்கும் விழா சேலம் பெண்கள் தனி கிளைச்சிறையில் நடைபெற்றது.;

Update: 2024-01-10 08:43 GMT

சேலம் பெண்கள் சிறைக்கு தையல் எந்திரங்கள்

சேலம் பெண்கள் தனி கிளைச்சிறையில் 51 பெண் கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு ஜே.எம்.எச்.ஏ. தொண்டு நிறுவனம் மூலம் 2 தையல் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பெண்கள் சிறையில் நடைபெற்றது. இதையடுத்து சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத்திடம், தொண்டு நிறுவன இயக்குனர் குளோரிதாஸ் தையல் எந்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் பெண்கள் தனி கிளைச்சிறை துணை அலுவலர் கீதா, உதவி அலுவலர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News