பெண்ணிடம் சில்மிஷம் - போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி முற்றுகை
ஆத்தூர் அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் மது போதையில் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் கத்தியால் பெண்ணை கீறியதால் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
முற்றுகை போராட்டம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மஞ்சினியை சேர்ந்த பெண் ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளார்.அப்போது மது போதையில் மூன்று இளைஞர்கள் திடீரென பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் முயன்றுள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த ராதா அருகிலுள்ள உறவினர்களுடன் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் உறவினர்கள் இளைஞர்களை தட்டிக்கேட்ட போது மறைத்து வைத்திருந்த மர்ம பொருளால் பெண்ணின் கையை கிழித்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சிறுவன் உட்பட இருவருக்கு தகராறில் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து மூன்று இளைஞர்களும் தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த ராதாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.