6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு -முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
மயிலாடுதுறை நகர் சேந்தங்குடி கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த 59 வயதுடைய உத்திராபதி, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 10ஆம் தேதி, அதே ஊரில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பேட் டச் செய்த முதியவர், குறித்து பெற்றோரிடம் கூறியதன்பேரில் , மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து, உத்திராபதிமீது மகளிர்போலீசார் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதியரசர் மணிவண்ணன், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய்.10,000 அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை என்று நிபந்தனை விதித்தார். தண்டனை பெற்ற உத்திராபதியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். . இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கனிமொழி ஆஜரானார். வழக்கில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி, பெண் தலைமை காவலர் வாலண்டினா ஆகியோர் செயல்பட்டனர்.