சிறுமி பாலியல் பலாத்காரம் - கூலி தொழிலாளி போக்சோவில் கைது
Update: 2023-12-17 06:21 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த தோணுகால் மேலத் தெருவை சோ்ந்தவா் குருநாதன் மகன் செல்வ கணேஷ்(21). கூலித் தொழிலாளியான இவா், 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கா்ப்பிணியான சிறுமியிடம் செல்வகணேஷ் கடந்த ஒரு மாதமாக தொடா்பு கொள்ளவில்லையாம். இது குறித்து சிறுமியின் பெற்றோா், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து செல்வ கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.