சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு 15 ஆண்டு சிறை

தர்மபுரி மாவட்டத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டு சிறை தண்டனையை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Update: 2024-05-01 05:41 GMT

நீதிமன்றம் 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. அதே கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, கடந்த 2019 ஆகஸ்ட் 3ம் தேதி வீட் டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சின்னசாமி, வீட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் குடும்பத்தார் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சின்ன சாமியை போக்சோ சட் டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சின்னசாமிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News