பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளுக்கு 3 ஆயுள் தண்டனை

மதுரை அண்ணாநகர் மேலமடை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் மிதித்து மதுரை மாவட்டம் மகிளா அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-01-31 04:58 GMT

2021 ஆண்டில் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலமடை பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்னை கத்தியைக் காட்டி மிரட்டி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான 1.விஜய் குருவி விஜய் வயது 34 , கார்த்திக் @ மெளலி கார்த்திக் 31, ஆகிய இருவர் மீதும் மதுரை மாநகர அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து avarkalai கைது செய்து மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்ற உத்தரவின் படி எதிரிகளை சிறையில் அடைத்தனர் மேற்படி வழக்கின் புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் மேற்படி எதிரிகள் இருவருக்கும் மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்றம் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து தண்டனையாக இருவருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனைகள் வீதம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 25,000/- அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேற்படி இரண்டு எதிரிகளும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவார்கள். எதிரி விஜய் என்ற குருவி விஜய்க்கு அனைத்து காவல் நிலையங்களிலும் அடிதடி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன.



Tags:    

Similar News