டயர் பஞ்சரானதால் நிறுத்தபட்ட ஷார்ஜா விமானம்!

கோவை -ஷார்ஜா விமானத்தின் டயர் பஞ்சரானதால் சீரமைப்பு பணி முடியும் வரை பயணிகள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

Update: 2024-06-02 01:38 GMT

பைல் படம் 

கோவை-ஷார்ஜா இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது.இந்த விமானம் தினமும் அதிகாலை 3. 45 மணியளவில் கோவையில் தரையிறங்கி மீண்டும் காலை 4.30 மணி அளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்லும். நேற்று  காலை 145 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் முன்பக்க டயர் பஞ்சராகி இருப்பது கண்டறியப்பட்டது.விமானிகள் கொடுத்த தகவலின் பெயரில் தொழில்நுட்ப குழுவினர் உடனடியாக பழுது சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.விமானத்தில் பயணிக்க இருந்தவர்கள் அருகில் இருந்த ஹோட்டல்களில் தங்க வைக்கபட்டனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வழக்கமாக 168 பயனுடன் விமானம் புறப்பட்டு செல்லும் எனவும், 145 பயணிகள் மட்டுமே விமானத்தில் இருந்த நிலையில் விமானம் ஓடுதள பாதையில் புறப்பட தயாராக கொண்டு செல்லப்பட்டபோது டயரின் பிரஷர் வித்தியாசம் உள்ளதை விமானிகள் கண்டறிந்து தகவல் அளித்ததை தொடர்ந்து உடனடியாக தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்த போது முன்பக்க டயரில் இருந்த பெரிய ஸ்க்ரூ ஒன்று டயரை கிழித்து இருந்தது தெரியவந்தது.என தெரிவித்தனர்.

Tags:    

Similar News