கொட்டகைக்கு தீவைப்பு: 5 பேர் கைது
பாபநாசம் அருகே கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகைக்கு தீ வைத்த 9 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2024-05-04 03:17 GMT
பாபநாசம் அருகே கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகைக்கு தீவைப்பு 9 பேர்கள் மீது வழக்கு பதிவு 5 பேர் கைது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தேவராயன் பேட்டை கிராமத்தில் வாய்க்காலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இப் பணியினை கள்ளக்குறிச்சி சின்னசேலம் தினேஷ்குமார் வயது 32 என்பவர் மேற்பார்வையாளராக இருந்து பணி செய்து வருகிறார் சம்பவத்தன்று தினேஷ்குமாருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதன் எதிரொலியாக சம்பவத்தன்று அதிகாலை கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகையின் மீது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதன் மீது வீசி வீசினர் இதனால் தீயில் ரூ. 25 ஆயிரம் பொருள்கள் எரிந்து நாசமாயின் இது குறித்து மேற்பார்வையாளர் தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் 9 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயக்குமார் 19 பாலகிருஷ்ணன் வயது 50 புண்ணியமூர்த்தி வயது 52 செல்லம்மா வயது 45 பரிமளா வயது 40 ஆகிய 5 பேர்களையும் கைது செய்து செய்தனர்.