சிவன் கோயில் ஐப்பசி திருவிழா
சிவன் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
By : King 24x7 Website
Update: 2023-10-30 10:02 GMT
தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த பாகம்பபிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் கொடியேற்றத்துடன் துவக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் என அழைக்கப்படும் சிவன் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண வைபவமும் ஒன்றாகும் ஐப்பசி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு இன்று காலை ஆறு முப்பது ஆறு மணிக்கு கணபதி ஹோமம் பின்னர் காலை 9:30 மணிக்கு த்வாஐரோஹனம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதைத் தொடர்ந்து கொடி மரத்தில் மலர்கள் தூவ கொடி ஏற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்டம் நவம்பர் ஏழாம் தேதியும் திருக்கல்யாண வைபவம் வரும் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த நிகழ்ச்சியில் பெருமாள் கோயில் அறங்காவல குழு தலைவர் ஏசி செந்தில்குமார், சிவன் கோயில் அறங்காவல குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர் குழு உறுப்பினர் பிஎஸ்கே ஆறுமுகம், சிவன் கோயில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம், திமுக வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.