ஜவுளித்துறை தொழிலாளர்களுக்கு குறுகியகால திறன் பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவுளித்துறை தொழிலாளர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-07 10:00 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் 

ஜவுளித்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சி, நூற்பு, நெசவு, பின்னல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஜவுளி மதிப்பு பிரிவுகளில் பயிற்சி அளிப்பதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் ஒன்றிணைந்து தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் (சிட்கா) மூலமாக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்து வேலையில்லா இளைஞர்கள் மற்றும் ஏற்கனவே வேலை பார்ப்பவர்களில் பயிற்சி தேவைப்படுபவர்கள் ஆகியோருக்கும், நூர்பு மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறை தொடர்பான பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி தேவைப்படுபவர்கள் இதற்காக தனியாக உருவாக்கப்பட்டுள்ள https://tntextiles.tn.gov.in/jobs/ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News