மருத்துவக்கல்லூரியில் ஊழியர்கள் பற்றாக்குறை
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் குடிநீர் குழாய் பராமரிப்பு, மின் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-01-29 08:54 GMT
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக 850 பேர் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். தீவிர சிகிச்சை, மகப்பேறு, வெளிநோயாளிகள், எலும்பு முறிவு, குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. டாக்டர்கள் 230 பேர் வரை பணிபுரிகின்றனர். மருத்துவமனை நிர்வாக பணிகளில் எலக்ட்ரீசியன், பிளம்பர், சமையலர் என 30 பணியிடங்கள் உள்ளன. ஆனால், இதில் 20 பணியிடம் காலியாகவே உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறையால் குடிநீர் குழாய் பராமரிப்பு, மின் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது