குறிஞ்சிப்பாடி அரசுபொது மருத்துவமனை முற்றுகை
குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையை முற்றுகையிப்பட்டது.
குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் மேல புதுப்பேட்டையை சேர்ந்த ராஜீவ் காந்தி மனைவி அனிதா வயது 26 என்பவரை கடந்த 5 ஆம் தேதி பிரசவத்திற்காக குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள் அனிதாவிற்கு நேற்று 8 ஆம் தேதி காலை 12 மணியளவில் பிரசாவலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். பி
ன்னர் அனிதாவிற்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. குழந்தை பிறந்த சில மணித் துளிகளில் தாய் அனிதாவிற்கு இரத்தப்போக்கு நிற்காமல் போனதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் செவிலியர்களுடன் சிதம்பரம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று மேல் சிகிச்சை செய்தனர்.
பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் தாய் அனிதா இறந்து விட்டதாகவும். பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்திருந்த நிலையில் இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பி
ன்னர் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் தற்காலிகமாக முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர். இறந்துபோன பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளதாகவும் இது இரண்டாவது பிரசவம் என குறிப்பிடத்தக்கது.