அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி
விராலிமலை அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.
விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக பள்ளிக்கல்வித் துறைசார்பில், மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்க அறிவுறுத்தியதோடு, வேற்றுமையில் ஒற்றுமை உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.இதன்படி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மாணவர்கள் வார நாள்களின் பெயர்களை சைகை மொழி மூலம் தெரியப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோபால் தலைமை வகித்து, மாணவர்களுக்கு உற்சாகமூட்டி சைகை மொழி பயிற்சி அளித்தார். விழாவில், பள்ளி ஆசிரியர்கள், காலை உணவு திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.