நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பிரச்சாரம்
பொதுமக்கள் மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டனர்
Update: 2023-12-09 01:11 GMT
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அச்சிடப்பட்ட அட்டையில் திமுக இளைஞரணி சார்பாக கையெழுத்து பிரச்சாரம் இன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் நீட் தேர்வு வேண்டாம் என வலியுருத்தும் விதமாக கையெழுத்திட்டனர் . இந்த நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அகதீஸ்வரன், தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, திமுக நிர்வாகிகள் சிவ.நடராஜன், ராஜசேகர் மற்றும் ஒன்றிய கழக, நகரக் கழக, மகளிர் அணி, இளைஞரணி, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.