தஞ்சாவூரில் சிலம்பாட்ட போட்டி

தஞ்சாவூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Update: 2024-02-12 06:48 GMT


தஞ்சாவூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில், தமிழன் சிலம்பாட்டக் கழகம், பெரியாா் வீர விளையாட்டுக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதனை மேயா் சண். ராமநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். போட்டிகளை துணை மேயா் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தாா்.

இப்போட்டியில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 5 வயது முதல் 18 வயது வரையிலான வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் கம்புச் சண்டை, ஒற்றை கம்பு ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழன் சிலம்பாட்டக் கழக நிறுவனா் விக்கி, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாவட்டச் செயலா் சரவணன், என்ரூட் குழும நிறுவனத் தலைவா் ஜெயக்குமாா், தமிழன் சிலம்பாட்டக் கழகம் சதீஷ்குமாா், தண்டா் விளையாட்டுக் கழக நிறுவனா் பொய்யாமொழி, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் கி.வ. சத்யராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News