மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிலம்பம்
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மும்மத வடிவில் நின்று தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
Update: 2024-01-22 05:11 GMT
விருதுநகர் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் (sfs) மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மதுரை,திண்டுக்கல்,விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மாணவ,மாணவியர் கலந்து கொண்ட தொடர்ந்து 1.30 மணிநேரம் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் டி.இ.ஓ ஜான் பாக்கியசெல்வம் தலைமையில் நடைபெற்றது.இந்து,கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குறியீடுகளான ஓம்,சிலுவை மற்றும் பிறைநிலா வரையப்பட்டு,முறையே தேசிய கொடியின் மூவர்ண உடையணிந்து மாணவர்கள் அதன் வடிவத்தில் நின்று சிலம்பம் சுற்றினர்.இதில் எல்.கே.ஜி முதல் +2 வரையிலான 220 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த சாதனை நிகழ்வை நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அரவிந்த் தலைமையிலான குழுவினர் பதிவு செய்தனர்.இந்த சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர்களுக்கு நினைவு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.