நாகை காமேஸ்வரம் கிராமத்தில் சிங்காரவேலரின் 78வது ஆண்டு நினைவு தினம்

நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மூத்த தலைவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 78வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-02-12 05:50 GMT


நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மூத்த தலைவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 78வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது.


🚩 நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம்,காமேஸ்வரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மூத்த தலைவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 78வது ஆண்டு நினைவு தினம் அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் என்.அமிர்தராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், தமிழ்நாடு சிறுபாண்மை வாரிய உறுப்பினர் ஏ.பி.தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிங்காரவேலரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தியாளர்களை சந்தித்த அவர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். மேலும் பாராளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும்,தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற இந்தியக் கூட்டணி பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை அதனால் மீண்டும் மோடி ஆட்சியில் அமர வைக்க மக்கள் விரும்பவில்லை அதனால் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என அவர் தெரிவித்தார் நிகழ்சியில் சிபிஐ முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.சம்பந்தம், மாவட்ட துணை செயலாளர் அ.பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர்கள் கௌசல்யா இளம்பரிதி, சரபோஜி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஓ.எஸ்.இப்ராஹீம், ஒன்றிய குழு துணைத்தலைவர் பெ.சௌரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனள்.

Tags:    

Similar News