தேர்தலில் பாஜகவிற்கு நோட்டாவுடன் தான் போட்டி :சிங்கை ராமசந்திரன்
தேர்தலில் பாஜகவிற்கு நோட்டாவுடன் தான் போட்டி நடக்கிறது என சிங்கை ராமசந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர் ”இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாகவும்,
தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என தெரிவித்தால் எங்களது பிரதிநிதி அக்கூட்டத்தில் பங்கேற்றார்.இதனைப் பார்த்து நான் பயந்து விட்டதாக பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோவைக்காரனுக்கு பயம் இருக்காது எனவும் அண்ணாமலை மட்டுமின்றி அவரது பாஸ் மோடியிடமே நான் அவரது மொழியிலேயே பேசத் தயார் என்றார்.அதிமுகவை அழித்து விடுவேன்,
டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற அவர் பாஜக கூட்டணிக்கு அதிமுக வர வேண்டுமென கடைசி வரை காத்திருந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் என்றவர் உங்களுக்கு தான் கூட்டணி தேவை. எங்களுக்கு தேவை இல்லை என்றார்.மூன்று ஆண்டுகளாக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை இந்த காலத்தில் அவர் என்ன சாதித்தார்? என கேள்வி எழுப்பியவர் நிறைகுடம் எப்போதும் தழும்பாது எனவும் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்றார்.
அதிமுக 50 ஆண்டுகளில் பல திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளதாக கூறியவர் இந்த தேர்தலில் பாஜகவிற்கு நோட்டா உடன் தான் போட்டி நடக்கிறது எனவும் பாஜக கட்சியில் பல பிரச்சனைகள் உள்ளன என்ற அவர் சீனியர்கள் அண்ணாமலையை மதிப்பதில்லை எனவும் ஓன் மேன் ஆர்மியாக அண்ணாமலை இருக்கிறார் என தெரிவித்தார்.
அதிமுக மிகப்பெரிய இயக்கம் எனவும் இதனை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் எனவும் அண்ணாமலை பேச்சினால் பாஜக டெபாசிட் கூட வாங்கக்கூடாது என அதிமுக தொண்டர் வெறி கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றவர் அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசுவதாகவும் பாஜகவின் அழிவு ஆரம்பமாகி விட்டது எனவும் 40 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக தேர்தல் அறிக்கையை ஒரு தொகுதிக்கு மட்டுமே வெளியிட்டுள்ளது.
நூறு வாக்குறுதிகளை 500 நாட்களில் நிறைவேற்றுவோம் என அறிக்கையில் உள்ளது 3500 நாட்களாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஏன் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.மூன்று ஆண்டுகளாக தலைவராக உள்ள அண்ணாமலை கோவைக்கு இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை என்றவர் கோவைக்கு திமுகவும் எதுவும் செய்யவில்லை.
பாஜகவும் எதுவும் செய்யவில்லை என்றார்.அண்ணாமலைக்கு தேவை சேவை செய்வது அல்ல எம்.பி பதவி தான் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என பாஜகவினர் கூறுகிறார்கள்.அதற்கு முதலில் மோடி அரசு அமைக்க வேண்டும் என்றார். தகர டப்பா உடன் வந்த அண்ணாமலை, ஹெலிகாப்டரில் தேனிக்கு பிரச்சாரம் செய்ய செல்ல காசு எங்கிருந்து வந்தது? என கேட்டவர் அண்ணாமலை பொய் மேல் பொய் சொல்வதாக தெரிவித்தார். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் அதிமுக கொடுத்துள்ளதாகவும் கோவையில் திமுகவும், பாஜகவும் தோல்வி பயத்தில் உள்ளது என்றவர் பிரதமர் மோடி,
நிர்மலா சீதாராமன் என யாரை கூப்பிட்டு வந்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும் என்றார்.பாஜக கீழ்தரமாக பிரிவினைவாத அரசியல் செய்வதாகவும் அமித்ஷா அதிமுகவை ஊழல் கட்சி என்கிறார்.ஆனால் தேர்தல் பத்திரம் நிதியாக 6500 கோடி ரூபாய் வாங்கியுள்ளது.ஊழலைப் பற்றி பேச மோடி, அமித்ஷா, அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றார். டிஆர்பி ராஜா வெளியூர்காரர் எனவும் நட்சத்திர விடுதியில் ரூம் போட்டு தங்கியிருந்து,ஒவ்வொரு அமைப்பாக பார்க்கிறார் எனவும் அவர் மின்கட்டண உயர்விற்கு என்ன செய்தார்? என கேள்வி எழுப்பினார்.அதிமுக திமுகவை அழிக்க ஆரம்பித்த கட்சி எனவும் தூங்கும் போது கூட நாங்கள் திமுகவை எதிர்ப்போம் என்ற அவர் சோசியல் மீடியாவில் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது எனவும்,
களத்தில் இருக்க வேண்டும் என்றவர் பாஜகவையும் அண்ணாமலையையும் நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றவர் அண்ணாமலைக்கு பதில் சொல்வது அதிமுக தலைவர்களின் வேலை அல்ல” எனத் தெரிவித்தார்.