சிதம்பரேஸ்வரர் - சிவகாமி அம்மன் திருக்கல்யாணம்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூர் சிதம்பரேஸ்வரர் - சிவகாமி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்தஅத்திப்புலியூரில் உள்ள . பழமை வாய்ந்த சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது . இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டுகோவில் உள்ள . மண்டபத்திற்கு சிதம்பரேஸ்வரர், சாமிக்கும், சிவகாமி அம்பாள் சுவாமிகள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்கள் அதை தொடர்ந்து பெண்கள் சீர் வரிசை நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் சீர் வரிசை பொருட்கள் எடுத்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் மாலை மாற்றும் வைபோகமும் ,காப்பு கட்டுதல், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது..தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து இருந்தனர். . ........ ........