சிவகங்கை மாணவர்கள் சாதனை
ஹரியானாவில் நடந்த 10ம் ஆண்டு மாணவர் ஒலிம்பிக் தேசிய விளையாட்டு போட்டியில், சிவகங்கை மாணவர்கள் தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில், ரோத்தக் மாவட்டத்தில் நடைபெற்ற 10ம் ஆண்டு மாணவர் ஒலிம்பிக் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் உட்பட 9 மாநிலங்கள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஜஸ்வந்த் பெருமாள் , கிர்ஷாந்த் பாலாஜி, ஆக்ஸ்போர்ட் பள்ளி மானவர்கள் பிரனேஷ், தேஸ்மா, தேவ் சபரீஷ், தர்மேஷ்,தீபன், காஞ்சி லக்ஷயா, விவான், ஹரி ரிசன், கபித் வாஜ் மற்றும் கற்பூர சுந்தர பாண்டி, காரைக்குடி செட்டி நாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் யுக ஆதித்யா, வர்ஷன் உள்ளிட்ட மொத்தம் 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 22 தங்க பதக்கங்களும், 7 வெள்ளி பதக்கங்களும், 3 வெண்கல பதக்கங்களும் வென்றனர். இவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத்தை பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை பெற்றனர்.