சிவகிரி சார்பதிவாளர் அலுவலக கட்டிடப் பணி துவக்கம்

சிவகிரி சார்பதிவாளர் அலுவலக கட்டிடப் பணி துவக்கம் விழா நடைபெற்றது

Update: 2024-03-10 13:33 GMT
சிவகிரி சார்பதிவாளர் அலுவலக கட்டிடப் பணி துவக்கம்

தென்காசி மாவட்டம் சிவகிரி உள்ள சார் பதிவா ளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ. 1. 95 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து புதிய கட்டிட பணிக்கான பூமி பூஜை நேற்று நடை பெற்றது. பூமி பூஜையை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜா தொடங்கி வைத்தார்.

சார்பதிவாளர் அலுவலர் அமுதா, வாசு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன், சங்கரன் கோவில் நகர திமுக செயலாளர் பிராகஷ், மாவட்ட திமுக மாணவரனி அமைப்பாளர் உதய குமார், ஒன்றிய செயலாளர் பெரிய துரை,

பேரூர் துணை செயலாளர் முனியாண்டி, பிச்சைமணி, சுந்தர வடிவேலு, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி, பத்திர சங்க தலைவர் நடராஜன், சார்பதிவாளர் அலுவலக தொழில்நுட்ப பணியாளர்கள் தர்மராஜ், மாலதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News