சிவகாசி: ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

Update: 2024-05-12 13:32 GMT
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து. 3 பேர் மீது வழக்கு பதிவு....

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் நேற்று முன்தினம் அதிகாலை வெடி விபத்து நடந்த மகேஸ்வரி பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து பெசோ அதிகாரிகளில் உத்தரவிட்டனர். உரிமையாளர், போர்மோன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.சிவகாசியை சேர்ந்த ராஜாராம் என்பவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை உரிமம் பெற்று நாராணாபுரம் புதூரில் மகேஸ்வரி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நேற்று அதிகாலையில் வேதிப்பொருட்கள் சேமிப்பு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறையில் இடிந்து தரைமட்டமானது. விசாரணையில் முந்தைய தினம் கலவை செய்த மணி மருந்தை விதிமீறி இருப்பு வைத்ததால் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த பெசோ அதிகாரிகள் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார், ஆலை உரிமையாளர் ராஜாராம், போர்மேன்கள் கருப்பசாமி, ஜெயராஜ் ஆகியோர் மீது வெடிபொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News