சிவசுப்பிரமணியசாமி கோவிலில் மாசி மாத திருவாதிரை வழிபாடு

மாசி மாத திருவாதிரை வழிபாடு தர்மபுரி குமாரசாமி பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்றது.

Update: 2024-02-19 15:10 GMT

மாசி மாத திருவாதிரை வழிபாடு தர்மபுரி குமாரசாமி பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மாசி 07 திங்கட்கிழமை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் மாசி மாத திருவாதிரை காலை சிறப்பு வழிபாடு மற்றும் மாலை ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் பெருமானுக்கு அபிஷேகம் சோடச உபசாரம் ருத்ர பாராயணம் மஹா தீபாராதனை

அதனைத் தொடர்ந்து பள்ளியறை பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் சென்ற ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News