விருதுநகர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட ஆறு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-11-30 10:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகரில் 7 வயது சிறுமி குள்ளூர் சந்தை பகுதியில் எட்டு வயது சிறுவன் எட்டநாயக்கன்பட்டி பகுதியில் ஒன்பது வயது சிறுமி திருச்சுழி தொப்பலாங்கரை பகுதியை சார்ந்த 13 வயது சிறுவன் நரிக்குடி கட்டணூர் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுவன் புல்வாய்க் கரை பகுதியைச் சார்ந்த 19 வயது பெண் என ஆறு பேருக்கு டெங்கு இருப்பது உறுதியாகி உள்ளது.

Advertisement

இதில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூவர் வீடு திரும்பி உள்ளனர்.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் டெங்கு அதிகரித்து வருவதால் மக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர் டெங்கு அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News