ஜேசிஐ குயின் பீஸ் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
தூத்துக்குடியில் ஜேசிஐ குயின் பீஸ் அமைப்பின் சார்பில் காது கேளாத வாய் பேச முடியாத மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
Update: 2024-04-26 10:43 GMT
தூத்துக்குடியில் ஜேசிஐ-யின் கிளை அமைப்பாக குயின் பீஸ் அமைப்பின் சார்பில் தூத்துக்குடியில் உள்ள குட் ஷெப்பர்ட் காது கேளாத வாய் பேச முடியாத பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமி 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் அவர்களுக்கு மாணவர்களின் தனித் திறமையை வெளிக்கொணரும் வகையிலும் அவரது வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் வருமானத்தை ஈட்டக்கூடிய நிலையை உருவாக்க சிலம்பம் ,ஜும்பா நடனம், மற்றும் காகிதத்தால் பை தயார் செய்வது, கீழே போடப்படும் பாட்டில்களை கொண்டு அதை அழகுப் பொருளாக மாற்றி மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது, ஐஸ் குச்சிகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது, அட்டையில் போட்டோ ஆல்பம் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் தயார் செய்த பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தனர். பயிற்சி முகாம் நிறைவு விழாவில் ஜேசிஐ மண்டல தலைவர் சிபி மற்றும் குயின் பீஸ் தலைவர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவித்தார்.