முகநூலில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு : வாலிபர் கைது!
முகநூலில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு : வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-07-04 04:52 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கனிமொழி எம்பி, அமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர். திருச்செந்தூரைச் சேர்ந்தவர் சங்கரநயினார் மகன் மணிகண்டன் (35), இவர் தனது முகநூலில் கனிமொழி எம்பி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் குறித்து அவதூறாக பதிவு செய்திருந்தாராம். இதுகுறித்து திமுக ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் அகமது விஷால் (26) என்பவர் ஏரல் காவல்நிலத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.