திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறுதானிய உணவு திருவிழா

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.;

Update: 2023-12-15 14:50 GMT

சிறுதானிய உணவு விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய 100 வகையான சிறுதானிய உணவு திருவிழா மாவட்ட ஆட்சியர் தலைமையில்நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023யை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

இந்த திருவிழாவில் பல்வேறு வகையான சிறுதானியங்கள் கொண்டு உணவுகள் தயாரித்து பார்வைக்கு வைத்தனர் இதில் கேழ்வரகு. சாமை தினை சோளம் கம்பு அரிசி குதிரைவாலிஉள்ளிட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் பருப்புவகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 100 க்கும் மேற்பட்ட வகையான உணவுகள் வைக்கப்பட்டு இருந்ததை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் பள்ளி மாணவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News