அருப்புக்கோட்டையில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Update: 2024-01-13 10:52 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ராமராஜ் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இப்பேரணியில் போகிப் பண்டிகையன்று,டயர்,ரப்பர்,பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்கள் கைகளில் மாசினை குறைப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்;துணிப்பை என்பது எளிதானது,தூர எறிந்தால் உரமாகுது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

இப்பேரணி எஸ். பி.கே பள்ளியில் தொடங்கி மெயின் பஜார் வழியாக சென்று நகரில் முக்கிய வீதிகளில் வலம்வந்து மீண்டும் அதே பள்ளியில் நிறைவு பெற்றது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News