திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து வாலிபர் மருத்துவமனையில் அனுமதி;
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 06:40 GMT
கோப்பு படம்
திருப்பத்தூர் அடுத்த சாந்தநகர் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சுரேஷ் வயது (30) இவர் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தபோது கழிவறையின் அருகே பதுங்கி இருந்த அடையாளம் தெரியாத பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் கூறுகையில் கொடிய விஷமுள்ள பாம்பு கடித்திருக்கும் என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.