ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு - பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-04 07:49 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இன்று மனு அளிப்பதற்காகவும் , மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் சேவைகளை பெறவும் ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செயல்படும் கனரா வங்கிக்கு அருகில் உள்ள மின் தூக்கியில் பாம்பு இருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். உடனடியாக துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மின் தூக்கி மின்சாரத்தை துண்டித்து பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் வரை தேடிப் பார்த்தும் பாம்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்புத் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாம்பு நடமாட்டம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News