கோர்ட் வளாகத்தில் பாம்பு!
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் 6 அடி சாரைப்பாம்பை அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.;
By : King 24x7 Desk
Update: 2023-12-02 09:42 GMT
snake
snake
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் 6 அடி சாரைப்பாம்பை அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற அவலாகத்தில் நீதிமன்ற துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றம் முழுவதும் பூஞ்சோலையாக மாறி பார்ப்பதற்கே மிகவும் அழகாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் நீதிமன்ற வளாகத்திற்குள் அடிக்கடி பாம்புகள் தென்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் இன்று நீதிமன்றம் வளாகம் எதிரே உள்ள பூங்காவில் திடீரென ஆறு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு உள்ளே புகுந்ததை பார்த்த நீதிமன்ற பணியாளர் அலரி அடித்து வெளியே ஓடிவந்து பாம்பு உள்ளே வந்துவிட்டது என கூறார், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பை அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு லாபகரமாக பிடித்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென சாரைப்பாம்பு புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.