பழக்கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மல்லசமுத்திரத்தில் பழக்கடைக்குள் புகுந்த கருஞ்சாரைப்பாம்பினை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.;

Update: 2023-12-21 11:51 GMT

மல்லசமுத்திரத்தில் பழக்கடைக்குள் புகுந்த கருஞ்சாரைப்பாம்பினை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

மல்லசமுத்திரம் வெங்கடேசபுரி பகுதியை சேர்ந்தவர் மாது55. இவர், மல்லசமுத்திரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 11மணியளவில், அவரது மகன் சிவா22 என்பவரை கடையை பார்க்க சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அச்சமயம், கடைக்குள் உஸ்., உஸ்., என சத்தம் கோட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ந்துபோயுள்ளார். தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான சிறப்பு நிலைய அலுவலர் சேட்டு மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிரேம்நாத் மற்றும் சிவசக்தி ஆகியோர் சுமார் ஆறடி நீளத்தில் மூன்று கிலோ எடைகொண்ட கருஞ்சாரைப்பாம்பை லாவகரமாக பிடித்து, ஆட்டையாம்பட்டி வனப்பகுதியில் விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News