திருவாரூரில் இதுவரை 66 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நடப்பாண்டில் மொத்தம் 66 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக என திருவாரூர் போலீஸ் எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-12-11 13:36 GMT

நடப்பாண்டில் மொத்தம் 66 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக என திருவாரூர் போலீஸ் எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 2023 ஆம் ஆண்டு கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 17 நபர்களும், கஞ்சா மற்றும் புகையிலை குற்றம் தொடர்பாக 03 நபர்களும், சட்டம் ஒழுங்கு வழக்குகளில் தொடர்புடைய 41 நபர்கள் மற்றும் பாலியல் குற்ற வழக்கில் 5 நபர்கள் என மொத்தம் 66 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று கள்ளத்தனமாக சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News