செக்கடிதாங்கல் ஏரியை துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செக்கடிதாங்கல் ஏரியை துார்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-12 15:28 GMT

ஏரியை தூர்வார கோரிக்கை

திருப்போரூர் பேரூராட்சி, நெம்மேலி செல்லும் சாலையை ஒட்டி, செக்கடித்தாங்கல் ஏரி உள்ளது. இதில், இரண்டு பிரதான மதகுகள் மற்றும் மூன்று நீர் பாசன கால்வாய்கள் உள்ளன. இவற்றின் மூலம், 200 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.

ஏரியின் மேற்கு புறத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளால், ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு, ஏரியின் அளவு சுருங்கி வருகிறது. மேலும், ஏரியை ஒட்டியுள்ள வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் மற்றும் கிழக்கு மாடவீதிகளில் உள்ள வடிகால்வாய் வழியாக வரும் கழிவுநீர், ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீரின் தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர்வள ஆதாரமும் குறைகிறது. எனவே, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். 

 அதேபோல், ஏரியில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டியும், துார்ந்தும் கிடக்கிறது. ஏரியை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News