மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு கணக்கெடுப்பு பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.;
Update: 2024-01-03 12:02 GMT
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு நவம்பர்-29-ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு-2023 பணி நடைபெற்று வருகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களை நாடி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களுக்கும் உரிய தகவல்களை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.