சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பொறுப்பு ஏற்பு: அலுவலர்கள் வாழ்த்து
ராசிபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பதவி ஏற்றுகொண்டதை தொடர்ந்து அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-14 09:15 GMT
பொறுப்பு வட்டாச்சியருக்கு வாழ்த்து சொன்ன அலுவலர்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கு முன் பணியாற்றி வந்த கிருஷ்ணன் அவர்கள் ஓய்வு பெற்றார். இதனை அடுத்து புதிய சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக ஆ. மகேஸ்வரி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு அரசு அலுவலர்கள், சக பணியாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் சமூக வட்டாட்சியர் ஆ. மகேஸ்வரி அவர்களுக்கு பிஜேபி கட்சி நிர்வாகி வழக்கறிஞர் தமிழ் நலன் பிரிவு பாஜக மாவட்ட தலைவர் வி.குமார், மற்றும் சரவணன், ஆகியோர் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.