மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக வலைத்தள அறிமுக கருத்தரங்கம்
சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக வலைத்தள அறிமுக கருத்தரங்கம் எனேபெல் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 09:25 GMT
கிராம சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டம், பெங்களூரு எனேபெல் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து 'குரல் நமது' என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக வலைத்தளம் அறிமுக கருத்தரங்கம் நேற்று சேலம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடந்தது. கிராம சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்ட இயக்குனர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். பணியாளர் விஜயா வரவேற்றார். பெங்களூரு எனேபெல் இந்தியா தொண்டு நிறுவன இணை மேலாளர் நந்தினி பேசும் போது, குரல் நமது என்பது மாற்றுத்திறனாளிகளால் மாற்று திறனாளிகளுக்காக நடத்தப்படும் சமூக வலைத்தளம் ஆகும். முதலில் கன்னடத்திலும், தற்போது தமிழிலும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாற்று திறனாளிகள் தங்களது பிரச்சினைகள், குறைகள் குறித்து கேட்டால் நாங்கள் வழிகாட்டுவோம் என்றார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக ஊழியர் குருபிரசாத் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், எனேபெல் இந்தியா தொண்டு நிறுவன மாநில மேலாளர் விமல் ராஜ்குமார், நிர்வாகி சின்னதுரை, வக்கீல் புவனேஸ்வரி, விழுதுகள் 87 அறக்கட்டளை நிர்வாகி முருளிதரன், லலித் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கிராம சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்ட அலுவலர் பட்டாபி ராஜா நன்றி கூறினார்.