தமிழில் மென்பொருள் உருவாக்கி வெளியிட்டவர் கருணாநிதி - சபாநாயகர் அப்பாவு
Update: 2023-11-03 05:00 GMT
கருத்தரங்கம்
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு,அரசு தலைமை கொறடா கோ.வி செழியன், மாவட்ட ஆட்சியர்சாரு ஸ்ரீ, திருவாரூர் எம் எல் ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது, மென்பொருட்கள் ஆங்கிலம்,இந்தி மொழிகளில் மட்டும் இருந்த நிலையில் தமிழில் மென்பொருளை உருவாக்கி வெளியிட்டவர் கருணாநிதி. தற்போது பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கி வருகிறது என தெரிவித்தார்.